கால்பந்து

சென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் நீட்டிப்பு + "||" + Chennai's F.C. Players Mailson, Nelson's contract extension

சென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் நீட்டிப்பு

சென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் நீட்டிப்பு
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 3–2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யை சாய்த்து 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 3–2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யை சாய்த்து 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. இறுதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து அசத்திய சென்னையின் எப்.சி. வீரர் மெயில்சன் ஆல்வ்சின் (பிரேசில்) ஒப்பந்த காலம் மேலும் 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போல் பல கோல்கள் அடிக்க உதவிகரமாக இருந்த மற்றொரு சென்னை அணி வீரர் கிரிகோரி நெல்சனின் (நெதர்லாந்து) ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.