கால்பந்து

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து ரிசர்வ் வங்கி-சென்னை எப்.சி.ஆட்டம் டிரா + "||" + Senior Divisional League Football Reserve Bank - Chennai F.C.

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து ரிசர்வ் வங்கி-சென்னை எப்.சி.ஆட்டம் டிரா

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து ரிசர்வ் வங்கி-சென்னை எப்.சி.ஆட்டம் டிரா
சீனியர் டிவிசன் லீக் கால்பந்து ரிசர்வ் வங்கி-சென்னை எப்.சி.ஆட்டம் டிராவில் முடிந்தது.
சென்னை,

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ரிசர்வ் வங்கி-சென்னை எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ரிசர்வ் வங்கி அணியில் சிவப்பிரியன் 5-வது நிமிடத்திலும், சிவபிரதாப்சிங் 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சென்னை எப்.சி. அணி தரப்பில் எம்மான்டெலினியோக் 27-வது மற்றும் 66-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார். இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சிட்டி எப்.சி.-வருமான வரி அணிகள் (மாலை 4 மணி) சந்திக்கின்றன.