கால்பந்து

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து தெற்கு ரெயில்வே அணி வெற்றி + "||" + Senior Division League Football South Railway team wins

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து தெற்கு ரெயில்வே அணி வெற்றி

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து தெற்கு ரெயில்வே அணி வெற்றி
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த சீனியர் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே அணி 1–0 என்ற கோல் கணக்கில் சுங்க இலாகா அணியை தோற்கடித்தது. இன்று மாலை 3.30 மணிக்கு ஐ.சி.எப்.ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை யுனைடெட் எப்.சி.–ஐ.சி.எப். அணிகள் மோதுகின்றன. முதல் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் ஸ்வராஜ் எப்.சி. அணி 3–1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் ரியல் மெட்ராஸ் எப்.சி. அணி 7–0 என்ற கோல் கணக்கில் தபால் துறை அணியை தோற்கடித்தது. இன்று மாலை நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஒய்.எம்.எஸ்.சி.–சென்னை சிட்டி போலீஸ், இந்திய உணவு கழகம்–டான்போஸ்கோ இளைஞர் மையம் அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் சிக்னல் கோளாறால் நடுவழியில் நின்ற ரெயில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிகள் நடந்து வந்தனர்
நெல்லையில் சிக்னல் கோளாறால் ரெயில் நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
2. மும்பையில் ரெயிலில் ஆராய்ச்சி மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபர் கைது
மும்பையில் பயணிகள் ரெயிலில் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
3. பாம்பனில் புதிய ரெயில்வே தூக்குப் பாலம் கட்டப்படும் - ரெயில்வே அதிகாரி பேட்டி
பாம்பனில் புதிய ரெயில்வே தூக்குப்பாலம் கட்டப்படும் எனவும் இந்த பணி ஒரு வருடத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே கட்டுமான பிரிவு செயல் இயக்குனர் தெரிவித்தார்.
4. பாளையங்கோட்டையில் அடுத்தடுத்து சம்பவம் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
நெல்லையில் அடுத்தடுத்த சம்பவங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.
5. அடிப்படை வசதியில்லா பாசஞ்சர் ரெயில்கள்
மானாமதுரை–மன்னார்குடி மற்றும் விருதுநகர்–திருச்சி பாசஞ்சர் ரெயில்களில் அடிப்படை வசதியில்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.