கால்பந்து

நட்புறவு கால்பந்து போட்டி அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் அதிர்ச்சி தோல்வி + "||" + Friendly football match Argentine and Germany failed to shock the teams

நட்புறவு கால்பந்து போட்டி அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் அதிர்ச்சி தோல்வி

நட்புறவு கால்பந்து போட்டி அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் அதிர்ச்சி தோல்வி
21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற ஜூன் 14–ந் தேதி முதல் ஜூலை 15–ந் தேதி வரை நடக்கிறது.

மாட்ரிட்,

21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற ஜூன் 14–ந் தேதி முதல் ஜூலை 15–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் நட்புறவு ஆட்டங்களில் விளையாடி வருகிறது. ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் நடந்த நட்புறவு ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின்–அர்ஜென்டினா அணிகள் மோதின. காயம் காரணமாக அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி இந்த போட்டியில் ஆடவில்லை. அவர் ஸ்டேடியத்தில் அமர்ந்து ஆட்டத்தை பார்த்தார். மெஸ்சி ஆடாததால் அர்ஜென்டினா அணியின் தடுமாற்றம் தெளிவாக தெரிந்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி 6–1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது. ஸ்பெயின் அணியில் டிகோ கோஸ்டா 12–வது நிமிடத்திலும், பிரான்சிஸ்கோ இஸ்கோ 27–வது, 52–வது, 74–வது நிமிடங்களிலும், தியாகோ அல்சென்ட்ரா 55–வது நிமிடத்திலும், லாகோ அஸ்பாஸ் 73–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அர்ஜென்டினா அணி தரப்பில் ஒடாமென்டி 39–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். 2016–ம் ஆண்டு ஐரோப்பியன்ஷிப் போட்டியில் ‘நாக்–அவுட்’ சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய பிறகு ஸ்பெயின் அணி தொடர்ந்து 18 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2009–ம் ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா அணி ஒரு ஆட்டத்தில் 6 கோல்களை வாங்கியது இதுவே முதல்முறையாகும்.

பெர்லினில் நடந்த மற்றொரு நட்புறவு ஆட்டத்தில் உலக சாம்பியன் ஜெர்மனி அணி, பிரேசிலை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இதன் மூலம் ஜெர்மனி அணியின் 22 ஆட்ட வெற்றி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அத்துடன் 2014–ம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் கண்ட மோசமான தோல்விக்கும் பிரேசில் பதிலடி கொடுத்தது. பிரேசில் அணியின் வெற்றிக்கான கோலை கேப்ரியல் சீசஸ் 37–வது நிமிடத்தில் தலையால் முட்டி போட்டார்.