டிவிசன் லீக் கால்பந்து சுங்க இலாகா அணி வெற்றி


டிவிசன் லீக் கால்பந்து சுங்க இலாகா அணி வெற்றி
x
தினத்தந்தி 31 March 2018 9:00 PM GMT (Updated: 31 March 2018 8:52 PM GMT)

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த சீனியர் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் சுங்க இலாகா அணி 3–0 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்துஸ்தான் ஈகிள்ஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் சென்னை யுனைடெட் எப்.சி. அணியை வென்றது. நாளை ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஆரோஸ் எப்.சி.–தெற்கு ரெயில்வே (அதிகாலை 6.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story