கால்பந்து

கால்பந்து போட்டி: சந்தோஷ் கோப்பையை வென்றது கேரளா + "||" + Football tournament: Kerala won the Santosh Trophy

கால்பந்து போட்டி: சந்தோஷ் கோப்பையை வென்றது கேரளா

கால்பந்து போட்டி: சந்தோஷ் கோப்பையை வென்றது கேரளா
72-வது சந்தோஷ் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்கால் அணியை வீழித்தி கேரளா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கொல்கத்தா,

மாநிலங்களுக்கு இடையிலான 72-வது சந்தோஷ் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்கால்- கேரளா அணிகள் கொல்கத்தாவில் நேற்று சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. இதையடுத்து வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் கேரள அணி 4-2 என்ற கோல் கணக்கில் பெங்காலை வீழ்த்தி 2004-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்த கோப்பையை வசப்படுத்தியது. மொத்தத்தில் அந்த அணி இந்த கோப்பையை வெல்வது இது 6-வது முறையாகும்.