கால்பந்து

கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து பிரேசில் அணி ‘சாம்பியன்’ + "||" + Copa America Womens Football Brazil team champion

கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து பிரேசில் அணி ‘சாம்பியன்’

கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து
பிரேசில் அணி ‘சாம்பியன்’
கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து போட்டி சிலி நாட்டில் நடந்தது. வெற்றிக்கோப்பையுடன் பிரேசில் பெண்கள் கால்பந்து அணியினர் ஆர்ப்பரிக்கின்றனர்.
சான்டியாகோ,

கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து போட்டி சிலி நாட்டில் நடந்தது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பிரேசில் அணி தனது 7 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. சிலி அணி 2-வது இடம் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் பிரேசில், சிலி அணிகள் அடுத்த ஆண்டு (2019) பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன. அத்துடன் பிரேசில் அணி 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி கண்டது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக எண்ணுகிறது- டொனால்டு டிரம்ப் கோபம்
அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
2. பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையில் ‘உறுதியான எந்த முடிவுக்கும் வந்துவிடவில்லை’ அமெரிக்கா அறிவிப்பு
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவுதி துணை தூதரகத்தில், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கடந்த மாதம் 2–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
3. சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கர் வெளியேற்றம் வடகொரியா முடிவு
சீனாவில் இருந்து கடந்த மாதம் 16–ந் தேதி, வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த ஒரு அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் லாரன்ஸ் புரூஸ் பைரன் என தெரிய வந்தது.
4. அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் : டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.
5. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு?
அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியது.