பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான ஏ.எப்.சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி இந்திய அணிகள் தேர்வு


பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான ஏ.எப்.சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி இந்திய அணிகள் தேர்வு
x
தினத்தந்தி 27 April 2018 6:26 AM GMT (Updated: 27 April 2018 6:26 AM GMT)

பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான ஏ.எப்.சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணிகள் தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது.

பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான ஏ.எப்.சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான ஏ.எப்.சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்று மலேசியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடக்கிறது.
இதற்கான அணிகள் குலுக்கல் நேற்று நடைபெற்றது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த தகுதிப் போட்டியில் இந்திய சிறுவர் அணி தேர்வு பெற்றது.

கடந்த இறுதிச் சுற்று போட்டிகள் கோவாவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிபியனோ பெர்ணான்டஸ், கூறும் போது "ஓரே நேரத்தில் ஒரு போட்டியில் அணி பங்கேற்கும். வலுவான அணிகளுடன் இந்தியா டிரா செய்துள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெறுவதே முதல் நோக்கமாகும். சிறுவர்கள் திறனை மேம்படுத்த ஏஐஎப்எப் கடுமையாக செயலாற்றி வருகிறது" என்று தெரிவித்தார்.

Next Story