கால்பந்து

பார்சிலோனா அணியில் இருந்து இனியஸ்டா விலகல் + "||" + Andres Iniesta to leave Barcelona at end of season

பார்சிலோனா அணியில் இருந்து இனியஸ்டா விலகல்

பார்சிலோனா அணியில் இருந்து இனியஸ்டா விலகல்
பார்சிலோனா அணியில் இருந்து இனியஸ்டா விலகுவதாக அறிவித்துள்ளார். #AndresIniesta
பார்சிலோனா,

பிரபல கால்பந்து வீரரான ஆன்ட்ரெஸ் இனியஸ்டா தான் விளையாடிய பார்சிலோனா அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

12-வது வயதில் பார்சிலோனா அணியில் இணைந்த இனியஸ்டா அதன் நட்சத்திர வீரர்களில் ஒருவராக மாறி பல்வேறு வெற்றிகளை பெற உதவினார். 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பை, 8 லா லிகா பட்டங்களையும், உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியிலும் இனியஸ்டா இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், 33 வயதான அவர் தொடர்ந்து தன்னால் பார்சிலானோ அணிக்கு சிறப்பான பங்களிப்பை தர முடியாது, சீனாவில் உள்ள கிளப்பில் இணைந்து கால்பந்து விளையாட்டை தொடருவேன். எனினும் பார்சிலோனா அணிக்கு எதிராக களம் இறங்கமாட்டேன் எனத் தெரிவித்தார். இந்த சீஸனின் இறுதிவரை அந்த அணியில் இனியஸ்டா தொடருவார் என எதிர்பார்கப்படுகிறது.

மேலும் ஆன்ட்ரெஸ் இனியஸ்டா 22 ஆண்டுகளாக பார்சிலோனா அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.