கால்பந்து

ஊழல் புகார் எதிரொலி; பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைவருக்கு வாழ்நாள் தடை + "||" + FIFA bans Brazilian football federation chief Marco Polo Del Nero over corruption

ஊழல் புகார் எதிரொலி; பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைவருக்கு வாழ்நாள் தடை

ஊழல் புகார் எதிரொலி; பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைவருக்கு வாழ்நாள் தடை
ஊழல் புகாரில் சிக்கிய பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. #FIFA
பிரேசில்,

ஊழல் புகார் எதிரொலியாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் மார்கோ போலோ டெல் நீரோவுக்கு வாழ்நாள் தடை விதித்து பிஃபா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிஃபாவின் நெறிமுறைகள், வழிகாட்டுதல்களை மீறி மார்கோ போலோ பல்வேறு ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு போட்டிகளில் ஒளிபரப்பு உரிமைகள், உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் புரிந்துள்ளார் என இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் கால்பந்து தொடர்பான விவகாரங்களில் தேசிய, சர்வதேச அளவில் அவர் செயல்பட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மேலும் 1 மில்லியன் யூரோ அபராதம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...