கால்பந்து

ஆசியக் கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு + "||" + Asian Cup football: India has the chance to qualify for the knockout round

ஆசியக் கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு

ஆசியக் கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு
ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்தியா வாய்ப்புள்ளதாக தலைமைப் பயிற்சியாளர் தெரிவித்தார். #AFCAsianCup
துபாய்,

ஆசியக்கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற வாய்ப்புள்ளது என அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் தெரிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டுக்கான ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அணிகள் குலுக்கல் துபாயில் நடைபெற்றது. இந்தியா, யுஏஇ, தாய்லாந்து, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.


இந்நிலையில், ’ஆசியக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் திறமை இந்திய அணிக்கு உண்டு. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். இதனால் இப்பிரிவு மிக எளிதான பிரிவு என அர்த்தம் இல்லை. சில அணிகளை வெல்லும் திறமை நமது அணி வீரர்களுக்கு உள்ளது. ஒவ்வொரு அணியிலும் வெவ்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. அவற்றை நாம் அறிந்து களத்தில் போராட வேண்டும்’ என அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் தெரிவித்தார்.