கால்பந்து

முதலில் ஆசியாவில் முதல் 10 இடத்திற்குள் வரவேண்டும் பின்னர்தான் உலக கோப்பை- கேப்டன் சுனில் சேத்ரி + "||" + Aim 1st to be in Asia top 10, World Cup later: Sunil Chhetri

முதலில் ஆசியாவில் முதல் 10 இடத்திற்குள் வரவேண்டும் பின்னர்தான் உலக கோப்பை- கேப்டன் சுனில் சேத்ரி

முதலில் ஆசியாவில் முதல் 10 இடத்திற்குள் வரவேண்டும் பின்னர்தான் உலக கோப்பை- கேப்டன் சுனில் சேத்ரி
வலுவான அணிகளுடன் சர்வதேச போட்டிகளில் இந்தியா மோதினால்தான் அதன் நிறை, குறைகள் அறிந்து செயல்பட முடியும் என்று கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார். #SunilChhetri #Football
புதுடெல்லி

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி குருகிராமில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய கால்பந்து அணி வலுவடைந்து வருகிறது.  மேலும், "ஐக்கிய அரபு நாடுகளில் ஆசியக் கோப்பை கால்பந்து 2019 போட்டிகள் நடக்க இன்னும் 6 மாதங்கள் உள்ளன. அதற்குள் இந்திய அணியை தயார்படுத்த வேண்டும். இதற்காக வலுவான அணிகளுடன் சர்வதேச போட்டிகளில் இந்தியா மோத வேண்டும். அப்போது தான் அணியின் நிறை, குறைகளை அறிந்து செயல்பட முடியும்.

கடந்த 2011-ஆம் ஆண்டு போட்டியில் துவக்கச் சுற்றிலேயே வெளியேற நேர்ந்தது. ஆனால் உள்நாட்டில் நடந்த போட்டிகளில் நாம் வெற்றிகளை குவித்துள்ளோம். ஆனால் வெளிநாட்டில் நடந்த போட்டிகளில் நமது வெற்றி சராசரி குறிப்பிடும்படி இல்லை என்பதை உணா்த்தினாா்.

உலக கோப்பை தகுதிச் சுற்று, ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்தியா சரிவர விளையாடவில்லை. வரும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியாவுடன், யுஏஇ, தாய்லாந்து, பஹ்ரைன் அணிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை குறைத்து மதிப்பிட முடியாது.
முதலில் ஆசியா அளவில் முதல் 10 இடங்களுக்குள் நுழைய வேண்டும் , பின்னர் தான்  உலகக் கோப்பை என்பதை விளக்கியுள்ளாா்.

இந்நிலையில் தொடர்ந்து 13 போட்டிகளில் வென்றதால் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களில் வந்துள்ளோம். இதற்காக நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.