கால்பந்து

இத்தாலிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி + "||" + France won the football match against Italy

இத்தாலிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி

இத்தாலிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி
இத்தாலிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.
நைஸ்,

இத்தாலிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இதில் 32 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இதில் பங்கேற்கும் அணிகள் தங்களது ஆட்ட திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.


உலக கோப்பை போட்டியில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் அணி, பயிற்சி ஆட்டத்தில் உலக கோப்பை தகுதி சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய இத்தாலி அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் பிரான்ஸ் நாட்டில் உள்ள நைஸ் நகரில் நடந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. பிரான்ஸ் அணியில் சாமுவேல் உம்திதி 8-வது நிமிடத்திலும், அன்டோய்ன் கிரிஸ்மான் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 29-வது நிமிடத்திலும், ஒஸ்மான் டெம்பிலே 63-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இத்தாலி அணி தரப்பில் கேப்டன் லினார்டோ போனுச்சி 35-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில், உலக கோப்பை போட்டியில் ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள துனிசியா அணி, துருக்கியை எதிர்கொண்டது.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. துனிசியா அணியில் அனிஸ் பத்ரி 56-வது நிமிடத்திலும், பெர்ஜானிச்சி 79-வது நிமிடத்திலும், துருக்கி அணியில் சென் தோசுன் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 54-வது நிமிடத்திலும், காக்லர் சோய்ன்சு 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.