கால்பந்து

நட்புறவு கால்பந்து போட்டி: 3 மாதத்திற்கு பிறகு களம் திரும்பிய நெய்மார் கோல் அடித்து அசத்தல் + "||" + Friendship football match: After 3 months Nayyar returned to the field Scoring goal

நட்புறவு கால்பந்து போட்டி: 3 மாதத்திற்கு பிறகு களம் திரும்பிய நெய்மார் கோல் அடித்து அசத்தல்

நட்புறவு கால்பந்து போட்டி: 3 மாதத்திற்கு பிறகு களம் திரும்பிய நெய்மார் கோல் அடித்து அசத்தல்
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் பிரேசில் அணி நேற்று நட்புறவு ஆட்டம் ஒன்றில் குரோஷியாவுடன் மோதியது.

லிவர்பூல்,

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் பிரேசில் அணி நேற்று நட்புறவு ஆட்டம் ஒன்றில் குரோஷியாவுடன் மோதியது. இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் பிரேசில் 2–0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரே‌ஷன் செய்து ஓய்வில் இருந்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் 3 மாதங்களுக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் சர்வதேச களத்திற்கு திரும்பினார். பிற்பாதியில் மாற்று ஆட்டக்காரராக இறக்கப்பட்ட அவர் 69–வது நிமிடத்தில் கோல் அடித்து உடல்தகுதியை எட்டிவிட்டதை நிரூபித்து காட்டினார். பிரேசில் அணிக்காக அவர் அடித்த 54–வது கோல் இதுவாகும்.

உலக கோப்பைக்கு முன்பாக பிரேசில் அணி இன்னொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரியாவுடன் 10–ந்தேதி மோதுகிறது.