கால்பந்து

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஜெர்மனி அணியில் மானுல் + "||" + Leroy Sane dropped from Germany's final World Cup squad, Manuel Neuer in

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஜெர்மனி அணியில் மானுல்

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஜெர்மனி அணியில் மானுல்
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஜெர்மனி அணியில் மானுல் நுவர் இடம் பிடித்துள்ளார்.
முனிச், 

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது.

உலக கோப்பை போட்டிக்கான 23 பேர் கொண்ட ஜெர்மனி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆச்சரியம் அளிக்கும் வகையில், தாக்குதல் ஆட்டத்தில் சிறந்த நடுகள வீரரான லராய் சானேவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எந்த போட்டியிலும் ஆடாமல் இருந்த கோல் கீப்பர் மானுல் நுவர் கடந்த வாரம் நடந்த ஆஸ்திரியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆடினார். இந்த நிலையில் அவர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியில் கோல் கீப்பர் பெர்ட் லினோ, முன்கள வீரர் நில்ஸ் பீட்டர்சன், பின்கள வீரர் ஜோனதன் ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஜெர்மனி அணி ‘எப்’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

23 பேர் கொண்ட பெரு அணியில் நடுகள வீரர் செர்ஜியோ பெனோவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிக்க முடியாமல் போனது தனது விளையாட்டு வாழ்க்கையில் கடினமான தருணமாகும்’ என்று செர்ஜியோ பெனோ கருத்து தெரிவித்துள்ளார்.

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி 14 மாத தடை விதிக்கப்பட்டு, பின்னர் உலக விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்து தண்டனையில் இருந்து தற்காலிகமாக விலக்கு பெற்ற கேப்டன் பாலோ குர்ரேரோ பெரு அணியில் இடம் பிடித்து இருக்கிறார். பெரு அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

எகிப்து அணியில், கடந்த மாதம் நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் முன்கள வீரர் முகமது சலா சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவர் உடல் தகுதி பெற்று லீக் ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் விளையாடாமல் இருக்கும் நடுகள வீரர் முகமது எல்னெனி அணியில் இடம் பிடித்துள்ளார். 45 வயதான கோல் கீப்பர் இஸ்சாம் எல் ஹடாரி அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியில் இஸ்சாம் எல் ஹடாரி ஆடினால், உலக கோப்பை போட்டியில் விளையாடிய அதிக வயதுடைய வீரர் என்ற சிறப்பை பெறுவார்.