கால்பந்து

உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் சிலி அணியிடம் செர்பியா தோல்வி + "||" + World cup football Chile team in the training game Serbia failed

உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் சிலி அணியிடம் செர்பியா தோல்வி

உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் சிலி அணியிடம் செர்பியா தோல்வி
21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14–ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது.

கிராஸ்,

21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14–ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள மொராக்கோ அணி, சுலோவக்கியாவை சந்தித்தது. இதில் மொராக்கோ அணி 2–1 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தியது. சுலோவக்கியா அணி வீரர் ஜான் கிரிக்ஸ் 59–வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். மொராக்கோ அணி தரப்பில் அயூப் எல் காபி 63–வது நிமிடத்திலும், யூனஸ் பெல்ஹன்டா 74–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் நகரில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள செர்பியா, தகுதி பெறாத சிலி அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் செர்பியா அணி 0–1 என்ற கோல் கணக்கில் சிலியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. சிலி அணி தரப்பில் குல்லெர்மோ மாரிபன் 89–வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். செர்பியா அணியினர் கோல் அடிக்க கிடைத்த நல்ல வாய்ப்புகளை வீணடித்தனர்.