கால்பந்து

பூனையால் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நிறுத்தம்; கிளப் அணிக்கு அபராதம் விதிப்பு + "||" + UEFA fine Besiktas after cat stops Champions League match

பூனையால் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நிறுத்தம்; கிளப் அணிக்கு அபராதம் விதிப்பு

பூனையால் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நிறுத்தம்; கிளப் அணிக்கு அபராதம் விதிப்பு
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பூனை புகுந்ததற்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. கிளப் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. #ChampionsLeague

துருக்கி நாட்டில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடந்தன.  இதில் துருக்கியின் பெசிக்டாஸ் அணியும், பேயர்ன் முனிச் அணியும் போட்டி ஒன்றில் விளையாடின.

இந்த போட்டியில் பூனை ஒன்று பாதுகாப்பினை மீறி களத்திற்குள் புகுந்தது.  இதனால் போட்டி நடுவர் மைக்கேல் ஆலிவர் ஆட்டத்தினை நிறுத்தி விட்டார்.

இந்நிலையில், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், போட்டியை போதிய பாதுகாப்புடன் நடத்தவில்லை என குற்றச்சாட்டு கூறி அபராதம் விதித்துள்ளது.  ரசிகர்கள் போட்டியின் நடுவில் பொருட்களை வீசி எறிந்தது மற்றும் படிக்கட்டுகள் மறிப்பு ஆகியவற்றிற்காகவும் 40 ஆயிரத்து 120 அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த போட்டியில் ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.