மெரினாவை பராமரிக்க ஒதுக்கும் நிதி எவ்வளவு? - சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | மெரினாவில் காவல் ஆணையருடன் காலை நடைபயிற்சி மேற்கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை | மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன? - உயர்நீதிமன்றம் | ஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும்- வானிலை மையம் | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் - சென்னை வானிலை மையம் | பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் சந்திப்பு |

கால்பந்து

கண்டங்களுக்கான கால்பந்து கோப்பை இறுதிப்போட்டியில் கென்யாவை வீழ்த்தி இந்தியா வெற்றி + "||" + Intercontinental Cup 2018 Final Highlights India vs Kenya: Chhetri Brace Helps India Lift The Title

கண்டங்களுக்கான கால்பந்து கோப்பை இறுதிப்போட்டியில் கென்யாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

கண்டங்களுக்கான கால்பந்து கோப்பை இறுதிப்போட்டியில் கென்யாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
கண்டங்களுக்கான கால்பந்து கோப்பை இறுதிப்போட்டியில் கென்யாவை வீழ்த்தி இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. #IntercontinentalCup
மும்பை, 

கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன. இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. 

ஏற்கனவே கென்யாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3–0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்த இந்திய அணி மீண்டும் கென்யாவை இறுதிப்போட்டியில் வெல்ல முனைப்புடன் இருந்தது. இதையடுத்து இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன.

இந்நிலையில் பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டார். மேலும் இந்த போட்டியில் தொடரில் சுனில் சேத்ரி மொத்தம் 8 கோல்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.