மெரினாவை பராமரிக்க ஒதுக்கும் நிதி எவ்வளவு? - சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | மெரினாவில் காவல் ஆணையருடன் காலை நடைபயிற்சி மேற்கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை | மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன? - உயர்நீதிமன்றம் | ஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும்- வானிலை மையம் | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் - சென்னை வானிலை மையம் | பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் சந்திப்பு |

கால்பந்து

ஆஸ்திரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அபார வெற்றி + "||" + Against the Austria team Training game Brazil is a great success

ஆஸ்திரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அபார வெற்றி

ஆஸ்திரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அபார வெற்றி
21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது.

வியன்னா, 

21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, தனது முதலாவது லீக்கில் சுவிட்சர்லாந்தை 17–ந்தேதி சந்திக்கிறது.

இதையொட்டி பிரேசில் அணி தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரியாவுடன் வியன்னா நகரில் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் வசமே பந்து அதிகமாக (65 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கேப்ரியல் ஜீசஸ் 36–வது நிமிடத்திலும், நெய்மார் 63–வது நிமிடத்திலும், பிலிப் காட்டினோ 69–வது நிமிடத்திலும் கோல் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இறுதியில் பிரேசில் 3–0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் வீழ்த்தியது. நெய்மார், பிரேசில் அணிக்காக அடித்த 55–வது கோல் இதுவாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்களின் பட்டியலில் 3–வது இடத்தில் இருக்கும் ரொமாரியோவை சமன் செய்தார். பிரேசில் அணி கடைசியாக ஆடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி உலக கோப்பை போட்டிக்குள் நுழையும் பிரேசிலுக்கு புத்துணர்ச்சியையும், கூடுதல் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, துனிசியாவை எதிர்கொண்டது. முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, முதல் பாதியில் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. எப்படியோ 84–வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் லகோ அஸ்பாஸ் அடித்தகோலின் உதவியுடன் ஸ்பெயின் 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.