கால்பந்து

விளையாட்டில் அரசியல் கூடாது என்ற கொள்கையோடு செயல்படும் பிஃபாவுக்கு நன்றி; ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் + "||" + Putin thanks FIFA for keeping politics out of sport

விளையாட்டில் அரசியல் கூடாது என்ற கொள்கையோடு செயல்படும் பிஃபாவுக்கு நன்றி; ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

விளையாட்டில் அரசியல் கூடாது என்ற கொள்கையோடு செயல்படும் பிஃபாவுக்கு நன்றி; ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
விளையாட்டில் அரசியல் கூடாது என்ற கொள்கையோடு செயல்படும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்புக்கு நன்றி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கூறியுள்ளார்.
மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை தொடங்கி வருகிற ஜூலை 15ந்தேதி வரை நடைபெற உள்ளன.  இந்த போட்டிகளை ரஷ்யா நடத்துகிறது.  இதற்காக மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் சொச்சி உள்ளிட்ட நகரங்களில் 12 மைதானங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் ரஷியா- சவூதி அரேபியா அணிகள் நாளை சந்திக்கின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. 2-வது நாள் ஆட்டங்களில் எகிப்து-உருகுவே (இந்திய நேரப்படி மாலை 5.30 மணி), மொராக்கோ-ஈரான் (இரவு 8.30 மணி), போர்ச்சுகல்-ஸ்பெயின் (இரவு 11.30 மணி) அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், மாஸ்கோ நகரில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிஃபா) மாநாடு இன்று நடந்தது.  இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார்.  அவர் உலக கோப்பைக்கு அருகே நின்றபடி பேசும்பொழுது, விளையாட்டில் அரசியல் கூடாது என்ற கொள்கையோடு பிஃபா செயல்படுகிறது என்பதனை சுட்டி காட்ட விரும்புகிறேன்.  அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்,