கால்பந்து

ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம் + "||" + Spain squad Coach Action Removal

ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்

ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்
ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாட்ரிட்,

ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக 2016-ம் ஆண்டு முதல் ஜூலென் லோப்டெகுய் இருந்து வந்தார். அவரது பயிற்சியின் கீழ் ஸ்பெயின் அணி 14 ஆட்டத்தில் வெற்றியும், 6 ஆட்டத்தில் டிராவும் சந்தித்துள்ளது. இந்த நிலையில் ரியல் மாட்ரிட் கிளப்பின் புதிய பயிற்சியாளராக ஜூலென் லோப்டெகுய் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். உலக கோப்பை போட்டி முடிந்ததும் அவர் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளார்.


இதற்கிடையே, தங்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் ரியல் மாட்ரிட் அணியின் நிர்வாகத்துடன் பயிற்சியாளர் பதவிக்கு பேச்சுவார்த்தை நடத்தியதால் ஆத்திரம் அடைந்த ஸ்பெயின் கால்பந்து சங்கம், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து 51 வயதான ஜூலென் லோப்டெகுய்யை நேற்று அதிரடியாக நீக்கியது. ஸ்பெயின் அணி, உலக கோப்பையில் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் நாளை களம் இறங்க உள்ள நிலையில், பயிற்சியாளர் கழற்றி விடப்பட்டு இருப்பது கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் பெர்னாண்டோ ஹியரோ உடனடியாக நியமிக்கப்பட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் கமிட்டி
பெண்கள் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
2. மெக்சிகோ கிளப் அணியின் பயிற்சியாளராக மரடோனா நியமனம்
மெக்சிகோ கிளப் அணியின் பயிற்சியாளராக மரடோனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. பெங்களூரு அணியின் பயிற்சியாளராக நெஹரா நியமனம்
பெங்களூரு அணியின் பயிற்சியாளராக நெஹரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டீட் நியமனம்
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டீட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. இந்திய பெண்கள் ஆக்கி அணியின் செயல்பாடு எப்படி? பயிற்சியாளர் கருத்து
பெண்கள் உலக கோப்பை ஆக்கியில் இந்திய அணி செயல்பாடு குறித்து, தலைமை பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். #womensHockeyWorldCup