கால்பந்து

ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை? + "||" + Cristiano Ronaldo ‘agrees’ two-year suspended jail sentence and €18.8m fine over tax evasion case

ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை?

ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை?
பிரபல கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுக்கு 148 கோடி அபரதாம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற ரியல்மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். 

ரியல்மாட்ரிட் அணிக்காக ஆடுவதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ அந்த நாட்டு அரசுக்கு சரியாக வருமான வரி செலுத்தவில்லை. இதனால் அவர் மீது வரிஏய்ப்பு வழக்கு தொடர்ந்து ஸ்பெயின் அரசு விசாரணை நடத்தியது. இந்த நிலையில் ரொனால்டோ, வருமானவரித்துறையுடன் சமரச தீர்வு கண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதாவது 2 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.148 கோடி அபராதம் செலுத்தவும் அவர் சம்மதம் தெரிவித்து இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக 2 ஆண்டு தண்டனை பெறுபவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. உருகுவேயின் சவாலை முறியடிக்குமா போர்ச்சுகல்?
இன்று நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில் உருகுவே அணி, போர்ச்சுகலை எதிர்கொள்கிறது.
2. சர்ச்சைகளுக்கு மத்தியில் ஈரானுடன் டிரா: 2வது சுற்றை எட்டியது போர்ச்சுகல்
ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் சில சர்ச்சைகளை தாண்டி ‘டிரா’ செய்த போர்ச்சுகல் அணி 2வது சுற்றை எட்டியது.
3. ஸ்பெயின்-போர்ச்சுகல் ஆட்டம் டிரா: ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை
ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து புதிய சாதனை படைத்தார்.
4. துளிகள்
ரொனால்டோ, ஸ்பெயினில் உள்ள கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
5. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து-கால்இறுதியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி
கால்இறுதி போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி, அந்தரத்தில் பல்டியுடன் கோல் அடித்து அசத்தினார் ரொனால்டோ.