கால்பந்து

களம் இறங்க மறுப்பு: குரோஷியா வீரர் நிகோலா திருப்பி அனுப்பப்படுகிறார் + "||" + Nikola Kalinic: Croatia send striker home after back injury claim

களம் இறங்க மறுப்பு: குரோஷியா வீரர் நிகோலா திருப்பி அனுப்பப்படுகிறார்

களம் இறங்க மறுப்பு: குரோஷியா வீரர் நிகோலா திருப்பி அனுப்பப்படுகிறார்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை (டி பிரிவு) வீழ்த்தியது. #NikolaKalinic
கலினிங்கிராட், 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை (டி பிரிவு) வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் போது 2-வது பாதியில் குரோஷியா அணியின் முன்கள வீரர் நிகோலா காலினிச்சை, தலைமை பயிற்சியாளர் ஜாட்கோ டாலிச் மாற்று வீரராக களம் இறங்க சொன்னார். ஆனால் முதுகுவலி காரணமாக தன்னால் களம் இறங்க முடியாது என்று நிகோலா காலினிச் மறுத்து விட்டார். இதனால் நிகோலா காலினிச்சை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப குரோஷியா அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...