கால்பந்து

பிரேசில் கால்பந்து அணி வீரர் நெய்மார் காயத்தால் அவதி + "||" + Brazilian football team player Neymar Suffering from injury

பிரேசில் கால்பந்து அணி வீரர் நெய்மார் காயத்தால் அவதி

பிரேசில் கால்பந்து அணி வீரர் நெய்மார் காயத்தால் அவதி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரேசில் அணி 1–1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்துடன் டிரா கண்டது.

சோச்சி, 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரேசில் அணி 1–1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்துடன் டிரா கண்டது. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மாரை குறி வைத்து சுவிட்சர்லாந்து வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். 10 முறை பவுல் செய்யப்பட்ட அவர் அவ்வப்போது கீழே விழுந்து எழுந்தார். இதனால் நெய்மார் பிரேசில் அணியினருடன் நேற்று சிறிது நேரம் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டார். வலது கணுக்காலில் நெய்மாருக்கு வலி ஏற்பட்டதால் அவர் பயிற்சியில் இருந்து பாதியில் விலகி ஓய்வு எடுத்ததுடன், அணியின் பிசியோதெரபிஸ்டிடம் சிகிச்சை பெற்றார். இதனால் அடுத்த லீக் ஆட்டத்தில் நெய்மார் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.