ஆடு கணிப்பு பலிக்குமா?


ஆடு கணிப்பு பலிக்குமா?
x
தினத்தந்தி 20 Jun 2018 9:00 PM GMT (Updated: 20 Jun 2018 8:56 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா–டென்மார்க் இடையிலான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எது? என்பதை ஜபியகா என்ற ஆடு மூலம் கணிக்கப்பட்டது.

சமரா, 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா–டென்மார்க் இடையிலான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எது? என்பதை ஜபியகா என்ற ஆடு மூலம் கணிக்கப்பட்டது. ரஷியாவின் சமராவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் பராமரிக்கப்படும் இந்த ஆடு, இந்த போட்டி டிராவில் முடியும் என்று கணித்துள்ளது. அதாவது இரு நாட்டு தேசிய கொடியுடன் அருகில் தட்டில் வைக்கப்பட்டிருந்த உணவை உட்கொள்ளாமல், ‘டிரா’ என்று ஒரு அட்டையில் எழுதி வைக்கப்பட்டிருந்த அருகில் உள்ள உணவை சாப்பிட்டது. முன்னதாக இரு நாட்டு அணிக்குரிய அருகில் வைக்கப்பட்டிருந்த உணவுகளை இரண்டு முறை முகர்ந்து பார்த்தால் இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் சமன் ஆகும் என்றும் ஆரூடம் சொல்லி இருக்கிறார்கள். இந்த ஆட்டின் கணிப்பு மெய்யாகுமா அல்லது பொய்யாகுமா என்பது இன்று இரவு தெரிந்து விடும்.

பெல்ஜியம் அணி இந்த உலக கோப்பையில் மகுடம் சூடும் என்பது இந்த ஆடு ஏற்கனவே கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story