கால்பந்து

உலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது பிரான்ஸ் அணி + "||" + The France team defeated Peru 1-0 in the World Cup football match

உலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது பிரான்ஸ் அணி

உலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது பிரான்ஸ் அணி
உலககோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. #FIFAWorldCup
மாஸ்கோ, 

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில், இன்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணி, தரவரிசையில் 11-வது இடத்திலுள்ள பெரு அணியை (பிரிவு சி) எதிர்கொண்டது. 

ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் இரவு 8.30 மணியளவில் (இந்திய நேரப்படி) மாஸ்கோவில் தொடங்கியது.
ஆட்டத்தின் முதல் பாதியின் 37-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் க்லீயான் மாபாபே கோல் அடித்து அசத்தினார். பின்னர் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் பெரு வீரர்கள் பதிலுக்கு கோல் அடிக்க முயற்சிக்க, பிரான்ஸ் அணியினர் சிறப்பான முறையில் செயல்பட்டு பெரு அணி வீரர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர். இறுதி வரைக்கும் பெரு அணி வீரர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. 

இதையடுத்து நடைபெறும் உலககோப்பை கால்பந்து போட்டியில் நட்சத்திரவீரர் மெஸ்ஸியைக் கொண்ட அர்ஜென்டினா அணி, குரோஷிய அணியை இன்றிரவு 11.30 மணியளவில் எதிர்கொள்கிறது. 

ஆசிரியரின் தேர்வுகள்...