கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து - கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி + "||" + World Cup 2018 Coutinho Neymar goals give Brazil victory

உலகக்கோப்பை கால்பந்து - கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து - கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றிப்பெற்றது. #WorldCup2018 #BRACRCஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தனது தொடக்க ஆட்டத்தில் (இ பிரிவு) சுவிட்சர்லாந்துடன் ‘டிரா’ கண்ட 5 முறை சாம்பியனான பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை எதிர்க்கொண்டது. கோஸ்டாரிகாவை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே பிரேசில் அணியின் நெய்மர், ஜீசஸ், கவுட்டினோ கோஸ்டா ரிகாவின் கோல் எல்லையை நோக்கி பந்தை கொண்டு சென்றே இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டமின்மை காரணமாக ஒரு பந்தும் கோல் கம்பத்திற்குள் செல்லவில்லை. 
அதிர்ஷ்டமின்மை மட்டும் காரணமல்ல. கோஸ்டா ரிகா கோல்கீப்பர் நவாஸும் ஒரு காரணம். பிரேசில் அணியின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார். 

இதனால் 90 நிமிடம் வரை பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. 90 நிமிடம் முடிந்தபிறகு காயம், ஆட்டம் நேரம் நிறுத்தத்தை கணக்கில் கொண்டு 7 நிமிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டது. இதில் பிரேசில் அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. முதல் நிமிடத்திலேயே ஃபிர்மினோ தலையால் முட்டி பந்தை கேப்ரியல் ஜீசஸிடம் கொடுத்தார். அந்த பந்தை சரியாக ஜீசஸ் காலில் படாமல் நழுவிச் சென்றது. பந்து சென்றதும் அருகில் நின்றிருந்த பிலிப்பே கவுட்டினோ வேகமாக ஓடிவந்து பந்தை கோல் நோக்கி அடித்தார். பந்து நவாஸை ஏமாற்றி அவரது கால் இடைக்குள்ளோடு சென்று கோல் ஆனது. இதனால் பிரேசில் 1-0 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் பிரேசில் சற்று நிம்மதி அடைந்து, தாக்குதல் ஆட்டத்தை கைவிட்டது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கடைசி நொடியில் டக்ளஸ் வலது பக்கம் கோல் எல்லைக்குள் வைத்து நெய்மரிடம் பந்தை பாஸ் செய்தார். அதை நெய்மர் எளிதாக கோலாக்கினார். இதனால் பிரேசில் 2-0 என வெற்றி பெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகக்கோப்பை கால்பந்து 2018: பிரான்ஸ் அணி “சாம்பியன்”
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி “சாம்பியன்” பட்டம் வென்றது. #FIFAWorldCup2018
2. உலகக்கோப்பை கால்பந்து 2018: முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி முன்னிலை
உலகக்கோப்பை கால்பந்து குரோஷியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. #FIFAWorldCup2018
3. உலகக்கோப்பை கால்பந்து: 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. #FIFAWorldCup2018
4. உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றிபெற்றது. #FIFAWorldCup2018
5. உலகக்கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
உலகக்கோப்பை கால்பந்தில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.