கால்பந்து

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது நைஜீரியா + "||" + World Cup football match: Nigeria defeated Iceland 2-0

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது நைஜீரியா

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது நைஜீரியா
உலககோப்பை கால்பந்து போட்டியில் நைஜீரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #FIFAWorldCup2018
மாஸ்கோ,

உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்றிரவு 8.30 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் 22-வது தரவரிசையிலுள்ள ஐஸ்லாந்து அணி, 48-வது தரவரிசையிலுள்ள நைஜீரிய அணியை எதிர்கொண்டது.

இந்நிலையில் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியின் 49-வது நிமிடத்தில் நைஜீரிய அணி வீரர் அஹ்மத் முசா மிகவும் துல்லியமாக செயல்பட்டு தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கி வைத்தார். அடுத்ததாக 75-வது நிமிடத்தில் அஹ்மத் முசா இரண்டாவது கோலை அடித்து நைஜீரிய ரசிகர்களை களிப்பில் ஆழ்த்தினார்.

இதனிடையே ஐஸ்லாந்து அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட நைஜீரிய அணி, இறுதியில் 2-0 என்ற கணக்கில் அசத்தலான வெற்றி பெற்றது. 


தொடர்புடைய செய்திகள்

1. உலககோப்பை கால்பந்து போட்டி: செனகல் அணியை வீழ்த்தியது கொலம்பியா
உலககோப்பை கால்பந்து போட்டியில் செனகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வீழ்த்தியது. #FIFAWorldCup2018
2. உலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை ஸ்வீடன் அணி வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி ஸ்வீடன் அணி வெற்றி பெற்றுள்ளது. #FIFAWorldcup2018
3. உலகக்கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து, பிரேசில் அணி இடையிலான ஆட்டம் ‘டிரா’
உலககோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து, பிரேசில் அணி இடையிலான ஆட்டம் ‘டிரா’ ஆனது. #FIFAWorldcup2018
4. உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி
உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி பெற்றுள்ளது. #FIFAWorldcup2018
5. உலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 கணக்கில் செர்பியா அணி வெற்றி
உலககோப்பை கால்பந்து போட்டியில் கோஸ்டாரிகா நாட்டுக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து செர்பியா அணி வெற்றி பெற்றுள்ளது. #FifaWorldCup2018