கால்பந்து

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள் + "||" + World Cup football Today's matches

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
ஐரோப்பிய கண்டத்தில் வலுவான அணிகளில் ஒன்றாக திகழும் பெல்ஜியம் தனது முதல் ஆட்டத்தில் பனாமாவை 3–0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.

*ஐரோப்பிய கண்டத்தில் வலுவான அணிகளில் ஒன்றாக திகழும் பெல்ஜியம் தனது முதல் ஆட்டத்தில் பனாமாவை 3–0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. இன்றைய ஆட்டத்தில் ஆப்பிரிக்க அணியான துனிசியாவையும் போட்டுத்தாக்கி அடுத்த சுற்றை உறுதி செய்யும் வேட்கையுடன் களம் காண்கிறது. உலக கோப்பை போட்டியில் ஆப்பிரிக்க அணி, ஐரோப்பிய அணிகளை வென்றது கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.

*‘எப்’ பிரிவில் தனது தொடக்க ஆட்டத்தில் உலக சாம்பியன் ஜெர்மனிக்கு 1–0 என்ற கணக்கில் ‘வேட்டு’ வைத்த மெக்சிகோ அணி, கூடுதல் நம்பிக்கையுடன் தென்கொரியாவை எதிர்கொள்கிறது. இதிலும் மெக்சிகோ வெற்றி பெற்றால் 2–வது சுற்றை எட்டி விடும்.

*‘நம்பர் ஒன்’ அணியும், 4 முறை சாம்பியனுமான ஜெர்மனியை பொறுத்தவரை சுவீடனுக்கு எதிரான இன்றைய மோதல் வாழ்வா–சாவா? போட்டியாகும். இதிலும் துவண்டு போனால் மூட்டையை கட்ட வேண்டியது. அதே சமயம் தென்கொரியாவை 1–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்த உலக கோப்பை போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சுவீடன், ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...