கால்பந்து

உலககோப்பை கால்பந்து போட்டி: செர்பியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து அணி + "||" + Switzerland team defeated Serbia 2-0 in World Cup football match

உலககோப்பை கால்பந்து போட்டி: செர்பியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து அணி

உலககோப்பை கால்பந்து போட்டி: செர்பியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து அணி
உலககோப்பை கால்பந்து போட்டியில் செர்பியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.
மாஸ்கோ,

உலககோப்பை கால்பந்து போட்டியில் நேற்றிரவு 11.30 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் 34-வது தரவரிசையிலுள்ள செர்பியா அணி, 6-வது தரவரிசையிலுள்ள சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது.

போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே செர்பியா அணியின் வீரர் அலெக்சாண்டர் மிட்ரோவிக் கோல் அடிக்க, செர்பிய வீரர்கள் துள்ளி குதித்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்ட சுவிட்சர்லாந்து அணி, செர்பிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இந்நிலையில் ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் வீரர் க்ரானிட் ஷாகா தனது அணி சார்பாக முதல் கோல் அடித்தார். இதனிடையே ஆட்டம் டிராவில் முடிவடையும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சுவிட்சர்லாந்து அணியின் வீரர் ஷாக்ரி 90-வது நிமிடத்தில் மற்றொரு  கோல் அடித்து சுவிட்சர்லாந்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

இறுதியில் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தியது. மேலும் சுவிட்சர்லாந்து அணி இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டது.