கால்பந்து

உலக கோப்பை கால்பந்து: துனிசியாவை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம் + "||" + World Cup 2018, Belgium vs Tunisia Highlights: 5-Star Belgium Run Riot vs Tunisia In Group G Clash

உலக கோப்பை கால்பந்து: துனிசியாவை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து:  துனிசியாவை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் துனிசியாவை 5-2 என்ற கணக்கில் பெல்ஜியம் அணி வீழ்த்தியது.
மாஸ்கோ, 

உலக கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் ஜீ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் - துனிசியா அணிகள் மோதின. பெல்ஜியம் அணி ஆறாவது நிமிடத்தில், பெனால்டி வாய்ப்பு மூலம் ஒரு கோல் அடித்தது. பெல்ஜியம் அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் ஒரு கோல் அடித்தார். அடுத்து, 16-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரொமெலோ லகாகு கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

அதைத்தொடர்ந்து 18-வது நிமிடத்தில் துனிசியா வீரர் டைலன் புரோன் கோல் அடித்தார். முதல் பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட  நேரத்தில் பெல்ஜியம் விரர் ரொமெலோ லகாகு மீண்டும் கோல் அடித்தார். துனிசியா வீரர்கள் முதல் பாதிநேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்காததால், இடைவேளையின் போது பெல்ஜியம் 3-1 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து இரண்டாவது பாதிநேர ஆட்டம் நடைபெற்றது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் பெல்ஜியம் வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 4-1 என முன்னிலை பெற்றது.
அதன்பின் துனிசியா அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. 90-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மிக்கி பட்ஷுவாயி கோல் அடித்தார். இது பெல்ஜியம் அணிக்கு மேலும் முன்னிலை கொடுத்தது.

இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட  நேரத்தில் துனிசியா வீரர் வாபி காஸ்ரி கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.