கால்பந்து

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ + "||" + World Cup football match: Mexico defeated South Korea 2-1

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ
உலககோப்பை கால்பந்து போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்திய மெக்சிகோ அணி, 2-வது சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது. #FifaWorldCup2018
மாஸ்கோ,

உலககோப்பை கால்பந்து போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றிரவு 8.30 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் தரவரிசை 15-ல் உள்ள மெக்சிகோ அணி, தரவரிசை 57-ல் இருக்கும் தென்கொரிய அணியை (பிரிவு எப்) எதிர்கொண்டது.

போட்டி தொடங்கிய 26-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் வீரர் கார்லோஸ் வெலா கோல் அடிக்க, 66-வது நிமிடத்தில் ஜாவியெர் ஹெர்னாண்டஷ் மெக்சிகோ அணிக்கு மற்றொரு கோலை பெற்று தந்தார். இதனிடையே போட்டியில் தொடர்ந்து மெக்சிகோ அணியே ஆதிக்கம் செலுத்தி வந்ததால் கோல் அடிக்க திணறிய தென்கொரிய அணி, கூடுதல் நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஆறுதலாய் இருந்தது. இருப்பினும் இறுதியில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது.