கால்பந்து

உலககோப்பை கால்பந்து போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணியை வீழ்த்தியது ஜெர்மன் அணி + "||" + World Cup football match: Germany defeated Sweden 2-1

உலககோப்பை கால்பந்து போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணியை வீழ்த்தியது ஜெர்மன் அணி

உலககோப்பை கால்பந்து போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணியை வீழ்த்தியது ஜெர்மன் அணி
உலககோப்பை கால்பந்து போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணியை வீழ்த்தி ஜெர்மன் அணி வெற்றி பெற்றது. #FifaWorldCup2018
மாஸ்கோ,

உலககோப்பை கால்பந்து போட்டியில் நேற்றிரவு 11.30 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் ’நம்பர் ஒன்’ இடத்திலிருக்கும் ஜெர்மனி அணி, 24-வது தரவரிசையிலுள்ள சுவீடன் அணியை (பிரிவு எப்) எதிர்கொண்டது.

போட்டி தொடங்கிய 32-வது நிமிடத்தில் சுவீடன் அணியின் வீரர் ஓலா டோய்வோனென் கோல் அடிக்க, அந்த அணி வீரர்கள் துள்ளி குதித்து சந்தோஷத்தை வெளிபடுத்தினர். இதனிடையே சுவீடன் அணிக்கு தக்க பதிலடி கொடுக்க காத்திருந்த ஜெர்மனி அணி, 48-வது நிமிடத்தில் மார்கோ ரெயுஷ் அடித்த கோலால் தலை நிமிர்ந்தது. பின்னர் இரு அணி வீரர்களும் திறம்பட செயல்பட்டதால் போட்டி டிராவில் முடிவடையும் என ரசிகர்கள் அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் ஜெர்மனி வீரர் டானி க்ரூஷ் அடித்த நேர்த்தியான கோலால், சுவீடன் அணி வீரர்கள் வாயடைத்து போயினர். இறுதியில் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணியை வீழ்த்தி இந்த உலககோப்பை சீசனில் தங்களது அணி சார்பாக முதல் வெற்றியை பதிவு செய்தது.