மைதானத்தில் அழுதது ஏன்? நெய்மார் விளக்கம்


மைதானத்தில் அழுதது ஏன்? நெய்மார் விளக்கம்
x
தினத்தந்தி 23 Jun 2018 9:30 PM GMT (Updated: 23 Jun 2018 8:55 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோஸ்டாரிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பிரேசில் 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மாஸ்கோ, 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோஸ்டாரிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பிரேசில் 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் கடைசி நிமிடத்தில் கோல் அடித்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் ஆட்டம் முடிந்தும் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தில் மண்டியிட்டு முகத்தை இருகைகளால் மறைத்தபடி கண்ணீர் விட்டு அழுதார். இது குறித்து பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த நிலைமைக்கு நான் வருவதற்கு என்னவெல்லாம் கஷ்டப்பட்டேன் என்பது யாருக்கும் தெரியாது. பேசுவது எளிது, ஆனால் செயலில் காட்டுவது கடினம். தடைகளை கடந்து வெற்றிக்கனியை பறித்ததும், மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. எனது வாழ்க்கையில் எதுவும் எளிதாக நடந்து விடவில்லை. எனது கனவு பயணம் இன்னும் தொடருகிறது. அதை கனவு என்பதை விட குறிக்கோள் என்று சொல்வேன். அருமையாக ஆடிய அணிக்கு வாழ்த்துகள்’ என்று 26 வயதான நெய்மார் அதில் கூறியுள்ளார்.


Next Story