உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்


உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
x
தினத்தந்தி 24 Jun 2018 9:16 PM GMT (Updated: 24 Jun 2018 9:16 PM GMT)

தலா 2 வெற்றிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்ட உருகுவேயும், போட்டியை நடத்தும் ரஷியாவும் தங்கள் பிரிவில் முதலிடத்தை பிடிப்பதற்காக மல்லுகட்டுகின்றன.

*தலா 2 வெற்றிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்ட உருகுவேயும், போட்டியை நடத்தும் ரஷியாவும் தங்கள் பிரிவில் முதலிடத்தை பிடிப்பதற்காக மல்லுகட்டுகின்றன. இந்த பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி ‘பி’ பிரிவில் 2–வது இடத்தை பெறும் அணியுடன் 2–வது சுற்றில் மோதும்.

*சவுதிஅரேபியா, எகிப்து அணிகள் 2 தோல்விகளுடன் அடுத்து சுற்று வாய்ப்பை இழந்து விட்ட அணிகளாகும். ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்குகின்றன.

*‘பி’ பிரிவில் 4 புள்ளிகளுடன் உள்ள முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி தனது கடைசி லீக்கில் ஆப்பிரிக்க தேசமான மொராக்கோவை சந்திக்கிறது. அடுத்த சுற்றை எட்டுவதற்கு ஸ்பெயின் அணி குறைந்தது டிராவது செய்ய வேண்டும். அதே சமயம் மொராக்கோ அணி 2 தோல்விகளுடன் முன்பே நாக்–அவுட் சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டது.

*கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், ஆசிய அணியான ஈரானை எதிர்கொள்கிறது. 2–வது சுற்றை உறுதி செய்ய இந்த மோதலில் போர்ச்சுகல் டிரா செய்தால் போதுமானது. அதே சமயம் 3 புள்ளியுடன் உள்ள ஈரானுக்கு அடுத்த சுற்று கனவு நனவாக இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே சாத்தியமாகும்.


Next Story