கால்பந்து

சுவிட்சர்லாந்து வீரர்களுக்கு அபராதம் + "||" + Switzerland is fine for players

சுவிட்சர்லாந்து வீரர்களுக்கு அபராதம்

சுவிட்சர்லாந்து வீரர்களுக்கு அபராதம்
சுவிட்சர்லாந்து அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சுவிட்சர்லாந்து வீரர்கள் கிரானிட் ஷக்கா, ஷகிரி கோல் அடித்த போது, அல்பேனியா நாட்டு தேசிய கொடிக்குரிய இரட்டை கழுகு தலையை நினைவூட்டும் வகையில் செய்கை காட்டினர். அல்பேனியாவுடன் சீரான உறவு இல்லாத செர்பியாவுக்கு வீரர்களின் செயல் ஆத்திரமூட்டியது. அவர்கள் இருவரையும் செர்பியா கால்பந்து சங்கம் கடுமையாக விமர்சித்தது.


இந்த நிலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஷக்கா, ஷகிரி இருவருக்கும் ரூ.6¾ லட்சம் அபராதமாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று விதித்தது. இதே போல் செர்பியா கால்பந்து சங்க தலைவர், அந்த அணியின் பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 3½ லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.