கால்பந்து

ரஷியாவை தோற்கடித்து உருகுவே அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி + "||" + Uruguay team beat hat-trick to defeat Russia

ரஷியாவை தோற்கடித்து உருகுவே அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

ரஷியாவை தோற்கடித்து உருகுவே அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
ரஷியாவை தோற்கடித்து உருகுவே அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.
சமாரா,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ரஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் ரணகளப்படுத்திய உருகுவே ‘ஹாட்ரிக்’ வெற்றியை சுவைத்து அமர்க்களப்படுத்தியது.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. சமாரா நகரில் நேற்று அரங்கேறிய ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஏற்கனவே 2-வது சுற்றை எட்டிவிட்ட முன்னாள் சாம்பியன் உருகுவேயும், ரஷியாவும் பலப்பரீட்சை நடத்தின.

அனுபவம் வாய்ந்த உருகுவே வீரர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். பந்து இவர்கள் வசமே (56 சதவீதம்) அதிகமாக சுற்றிக்கொண்டு இருந்தது. 10-வது நிமிடத்தில் ரஷிய வீரர் காஜின்ஸ்கி ‘பவுல்’ செய்ததால் உருகுவேக்கு ‘பிரிகிக்’ வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பில் உருகுவே அணியின் முன்னணி வீரர் லூயிஸ் சுவாரஸ் இலக்கை நோக்கி உதைத்தார். வரிசையாக அரண் போல் நின்ற வீரர்களை உரசாமல் தாழ்வாக சீறிப்பாய்ந்த பந்து வலைக்குள் அற்புதமாக ஓடியது. எதிரணியின் கோல் பகுதியை அடிக்கடி முற்றுகையிட்ட உருகுவேக்கு 23-வது நிமிடத்தில் 2-வது கோல் வாய்ப்பு கனிந்தது. உருகுவே வீரர் டியாகோ லக்சால்ட் வலையை நோக்கி வலுவான அடித்த ஷாட், குறுக்கே நின்ற ரஷிய வீரர் டெனிஸ் செர்ஷிவ்வின் காலில் பட்டு வலைக்குள் சென்றது. இதனால் இது சுயகோலாக மாறியது. நடப்பு தொடரில் பதிவான 6-வது சுயகோல் இதுவாகும். இதன் மூலம் உருகுவே 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

கட்டமைக்கப்பட்ட உருகுவேயின் தடுப்பு அரணை உடைக்க ரஷிய வீரர்கள் போராடிய வேளையில் 36-வது நிமிடத்தில் அந்த அணிக்கு இன்னொரு பேரிடி விழுந்தது. எதிரணி வீரரை தள்ளியதால் ரஷியாவின் இகோர் ஸ்மோல்னிகோவ் 2-வது முறையாக மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார். 2-வது மஞ்சள் அட்டை என்பது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் ஸ்மோல்னிகோவ் மைதானத்தை விட்டு நடையை கட்டினார். அடுத்த ஆட்டத்திலும் அவரால் ஆட முடியாது. இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைமைக்கு ரஷியா தள்ளப்பட்டது.

முதல் இரு ஆட்டங்களில் கோல்மழை பொழிந்த ரஷியா இந்த முறை வெகுவாக தடுமாறியது. குழுமியிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் ‘கோல் வேண்டும்...கோல் வேண்டும்’ என்று கோஷமிட்டனர். ஆனால் ரஷியாவின் முயற்சி எதுவும் கைகூடவில்லை.

ஷாட் அடிப்பதிலும் சரி (15 ஷாட்), பந்தை துல்லியமாக கடத்துவதிலும் சரி உருகுவே வீரர்களின் கையே மேலோங்கி நின்றது. ஒரு வீரரை இழந்ததால் துவண்டு போன ரஷியா இலக்கை நோக்கி ஒரு ஷாட் மட்டுமே அடித்தது.

கடைசி நிமிடத்தில் உருகுவே மேலும் ஒரு கோல் போட்டது. டியாகோ காடின் தலையால்முட்டிய பந்து, ரஷிய கோல் கீப்பர் இகோர் அகின்பீவ்வின் கையில் பட்டு திரும்பி வந்தது. அருகில் நின்ற மற்றொரு உருகுவே வீரர் எடிசன் கவானி பந்தை கோலுக்குள் அனுப்பினார்.

முடிவில் உருகுவே 3-0 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் இந்த பிரிவில் முதலிடத்தை பிடித்தது. ஏற்கனவே எகிப்து, சவுதிஅரேபியா அணிகளையும் உருகுவே வீழ்த்தி இருந்தது. 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் ரஷியா 2-வது இடத்தை பிடித்தது.

ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்த உருகுவே 2-வது சுற்றில் பி பிரிவில் 2-வது இடத்தை பெறும் அணியுடன் மோதும்.

தொடர்புடைய செய்திகள்

1. பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2. ரஷியாவில் பரபரப்பு: குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்கும் பனிக்கரடிகள் - அவசர நிலை பிரகடனம்
ரஷியாவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் பனிக்கரடிகள் வர தொடங்கி உள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
3. உலகைச்சுற்றி...
ரஷியாவில் நிலக்கரி சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ், விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.
4. ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 4 பேர் சாவு
ரஷிய தலைநகர் மாஸ்கோவின் மத்திய பகுதியில் உள்ள நிக்கிட்ஸ்கை பவுல்வர்டு என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 10–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
5. உலகைச்சுற்றி...
ரஷியாவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது.