கால்பந்து

அர்ஜென்டினாவை கரைசேர்ப்பாரா மெஸ்சி? + "||" + Argentine is the Carisserya Messi?

அர்ஜென்டினாவை கரைசேர்ப்பாரா மெஸ்சி?

அர்ஜென்டினாவை கரைசேர்ப்பாரா மெஸ்சி?
அர்ஜென்டினாவை கரைசேர்ப்பாரா மெஸ்சி என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
*‘சி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி 2 வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. இந்த பிரிவில் அடுத்த சுற்றை எட்டும் இன்னொரு அணி எது என்பது இன்று இரவு தெரிந்து விடும். 4 புள்ளிகளுடன் உள்ள டென்மார்க் அணி பிரான்சுடன் டிரா செய்தாலே நாக்-அவுட் சுற்றை அடைந்து விடலாம். அதே சமயம் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் பெருவை வீழ்த்த வேண்டும், பிரான்ஸ் அணி, டென்மார்க்கை சாய்க்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் ஆஸ்திரேலியா, டென்மார்க் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் ஒரு அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.


*‘டி’ பிரிவில் முக்கியமான ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. ஐஸ்லாந்துடன் டிரா கண்டு, குரோஷியாவுடன் படுதோல்வி அடைந்த அர்ஜென்டினா (1 புள்ளி) இன்றைய தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியில் உள்ளது. அப்போது தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும். முதல் இரு ஆட்டங்களிலும் சொதப்பிய அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்சி இந்த ஆட்டத்திலாவது ஜொலிப்பாரா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தங்கள் அணியை அவர் வெற்றிகரமாக கரைசேர்க்க தவறினால் இத்துடன் அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிந்து போகும் ஆபத்து கூட இருக்கிறது. அதே சமயம் அர்ஜென்டினாவுக்கு ‘ஆப்பு’ வைத்து அடுத்த சுற்றுக்குள் நுழைவதில் நைஜீரியா இளம் படையினரும் கங்கணம் கட்டி நிற்பதால் இந்த ஆட்டத்தில் அனல்பறக்கும் என்று நம்பலாம்.

ஏற்கனவே 2-வது சுற்றை உறுதி செய்து விட்ட பலம் வாய்ந்த குரோஷியா அணி, கடைசி லீக்கில் ஐஸ்லாந்துடன் மோதுகிறது. இதில் குரோஷியா எளிதில் வெற்றி காணும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஒரு வேளை ஐஸ்லாந்து அதிர்ச்சி அளித்தால், அர்ஜென்டினாவுக்கு சிக்கல் உருவாகும்.