உலககோப்பை கால்பந்து தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி வெளியேறியது


உலககோப்பை கால்பந்து தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி வெளியேறியது
x
தினத்தந்தி 27 Jun 2018 4:15 PM GMT (Updated: 27 Jun 2018 4:15 PM GMT)

உலககோப்பை கால்பந்து தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி வெளியேறியது.

மாஸ்கோ,

‘எப்’ பிரிவில் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றை உறுதி செய்யவில்லை. தொடக்க ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்த உலக சாம்பியன் ஜெர்மனி அணி 2-வது ஆட்டத்தில் சுவீடனை கடைசி நிமிடத்தில் கோல் போட்டு வீழ்த்தியது.  இன்றைய ஆட்டத்தில் தென்கொரியாவை சாய்த்தால் மட்டுமே ஜெர்மனியால் அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

 அதே சமயம் சுவீடன் தனது கடைசி லீக்கில் மெக்சிகோவை தோற்கடித்தால் அதன் பிறகு ஜெர்மனி, மெக்சிகோ, சுவீடன் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் இரண்டு அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும். சுவீடன் தோல்வியை தழுவினால், ஜெர்மனிக்கு சிக்கல் விலகி விடும்.

இந்தநிலையில் இன்று நடைபெற்ற குரூப் எப் பிரிவில் மெக்சிகோ, ஸ்வீடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியதால் ஜெர்மனி அணி வெளியேறியது.  மெக்சிகோவுடனான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணி வெற்றி பெற்றது. 

குருப் எப் பிரிவில் மெக்சிகோ, ஸ்வீடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியதால் ஜெர்மனி வெளியேறியது. குரூப் எப் பிரிவில் 3-வது இடம் பிடித்து ஜெர்மனி வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  குரூப் எப் பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை 2-0 என தோற்கடித்தது தென்கொரியா. 

80 ஆண்டுகளில் நாக் அவுட் சுற்றுக்கு ஜெர்மனி தகுதிபெறாதது இதுவே முதல்முறை. கடைசியாக 1938 உலககோப்பை கால்பந்தில் ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது.

Next Story