கால்பந்து

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள் + "||" + Today's matches in World Cup football

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
உலக கோப்பை கால்பந்தில் லீக் சுற்று ஆட்டம் இன்றுடன் முடிகிறது.

* உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. ‘எச்’ பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் ஜப்பான்-போலந்து அணிகள் சந்திக்கின்றன. ஜப்பான் அணி இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட போலந்து அணி ஜப்பானை வீழ்த்தினால் அது ஆறுதல் வெற்றியாக அமையும். இதேபிரிவில் மற்றொரு ஆட்டத்தில் செனகல்-கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் செனகல் டிரா கண்டாலே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விட முடியும். கொலம்பியா அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

* ‘ஜி’ பிரிவில் நடக்கும் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே பெற்ற 2 வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. எனவே தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்பதற்கே இரு அணிகளும் மல்லுக்கட்டும். இதே பிரிவில் அரங்கேறும் பனாமா-துனிசியா இடையிலான ஆட்டம் சம்பிரதாயத்துக்கு தான். ஏற்கனவே இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் ஆறுதல் வெற்றியை சுவைக்கவே இந்த ஆட்டம் உதவும்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிப்பு- புதின்
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிக்கபட்டதாக ரஷ்ய அதிபர் புதின் கூறி உள்ளார். #VladimirPutin
2. உலக கோப்பை கால்பந்தில் 3-வது இடம் யாருக்கு? - பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. இன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக ரஷ்யா சென்றுள்ள சுவீடன் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் திடீரென தீ எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. போலியாக நடிப்பதாக விமர்சனம் ; நான் நடிக்கிறேனா நெய்மர் கோபம்
போலியாக நடிப்பதாக விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து நான் நடிக்கிறேனா என நெய்மர் கோபம் அடைந்துள்ளார். #Neymar
5. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
உலக கோப்பை கால்பந்தில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.