கால்பந்து

உலககோப்பை கால்பந்து போட்டி: இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பெல்ஜியம் + "||" + World Cup football competition Belgium beat England

உலககோப்பை கால்பந்து போட்டி: இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பெல்ஜியம்

உலககோப்பை கால்பந்து போட்டி:  இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பெல்ஜியம்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வீழ்த்தியது.
மாஸ்கோ,

உலககோப்பை கால்பந்து போட்டியில் ‘ஜி’ பிரிவில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் ஏற்கனவே பெற்ற 2 வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. எனவே தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்பதற்கே இரு அணிகளும் மல்லுக்கட்டின. 

இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தன. இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்காததால், ஆட்டம் சமனில் இருந்தது.

இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் பெல்ஜியம் அணி கோல் அடித்தது. இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி இறுதிவரை கோல் அடிக்காததால், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்தது.
 

ஆசிரியரின் தேர்வுகள்...