கால்பந்து துளிகள்


கால்பந்து துளிகள்
x
தினத்தந்தி 3 July 2018 8:53 PM GMT (Updated: 3 July 2018 8:53 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முதல்சுற்றுடன் வெளியேறினாலும் அந்த அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோவின் பதவிக்கு ஆபத்து இல்லை.

*உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முதல்சுற்றுடன் வெளியேறினாலும் அந்த அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோவின் பதவிக்கு ஆபத்து இல்லை. அவரது ஒப்பந்த காலம் 2022–ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

*பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிறகு பேட்டி அளித்த ஜப்பான் அணியின் முன்னணி வீரர் 32 வயதான கெய்சுக் ஹோண்டா சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் ஜப்பான் அணிக்காக 98 ஆட்டங்களில் ஆடி 37 கோல்கள் அடித்துள்ளார்.

*உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றுடன் போலந்து அணி தோற்றதன் எதிரொலியாக அந்த அணியின் பயிற்சியாளர் ஆடம் நவல்காவின் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க போலந்து கால்பந்து சங்கம் விரும்பவில்லை. இதனால் இந்த மாதத்துடன் நவல்கா விலகுகிறார்.

*குரோஷியாவுக்கு எதிரான பெனால்டி ஷூட்–அவுட்டில் டென்மார்க் வீரர் நிகோலைய் ஜோர்கென்சன் தனக்குரிய வாய்ப்பை கோலாக்க தவறினார். இதனால் குரோஷிய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஜோர்கென்சனை அந்த நாட்டு ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக திட்டி தீர்த்து இருப்பதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து டென்மார்க் கால்பந்து சம்மேளனம் போலீசில் புகார் அளித்துள்ளது.

*தசைப்பிடிப்பால் அவதிப்படும் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் கவானி நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவர் கால்இறுதியில் ஆடுவது கேள்விக்குறியாகியிருக்கிறது.


Next Story