கால்பந்து

கால்பந்து துளிகள் + "||" + Football drops

கால்பந்து துளிகள்

கால்பந்து துளிகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2–வது சுற்றில் ஜப்பான் போராடி தோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் மகோட்டோ ஹசிபி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

*லக கோப்பை கால்பந்து போட்டியில் 2–வது சுற்றில் ஜப்பான் போராடி தோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் மகோட்டோ ஹசிபி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 34 வயதான மகோட்டோ ஜப்பான் அணிக்காக 102 ஆட்டங்களில் விளையாடி 2 கோல் அடித்துள்ளார்.

*உலக கோப்பை கால்பந்து போட்டியில் கால்இறுதியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்து உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘பிரான்ஸ் அணியின் பாப்பே, உண்மையிலேயே மிகச்சிறந்த வீரர் என்பதை அறிவோம். ஆனால் அவரை கட்டுப்படுத்துவதற்குரிய தடுப்பாட்டக்காரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்’ என்றார்.

*இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்வென்–கோரன் எரிக்ஸ்சன் அளித்த பேட்டியில், ‘சுவீடன் மிகவும் வலுமிக்க அணியாக விளங்குகிறது. இங்கிலாந்து அணி பிரேசிலைகூட எளிதாக வீழ்த்தி விட முடியும். ஆனால் சுவீடனுக்கு எதிராக கடுமையான சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.’ என்றார்.

*போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ, நீண்ட காலமாக ரியல்மாட்ரிட் கிளப்புக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் அந்த கிளப்பை விட்டு விலக விரும்புவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவரை தங்கள் அணிக்கு இழுக்க இத்தாலியின் யுவென்டஸ் கிளப் முன்வந்துள்ளது.