கால்பந்து

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜிய அணி + "||" + The Belgian team entered the semi-finals of the 2-1 defeat to Brazil

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜிய அணி

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜிய அணி
உலககோப்பை கால்பந்து போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. #FifaWorldCup2018
கஜன்,

உலககோப்பை கால்பந்து போட்டிகள் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள நேரத்தில், 2-வது காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியுடன் மோதியது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் துவங்கியது.

போட்டி துவங்கிய 13-வது நிமிடத்திலேயே பெல்ஜிய அணி வீரர் ஃபெர்னான்டின்ஹோ கோல் கணக்கை துவக்க அந்நாட்டு ரசிகர்கள் குதூகலமாயினர். தொடர்ந்து போட்டியில் பெல்ஜிய அணியே ஆதிக்கம் செலுத்த ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் கெவின் டே ப்ருன்னே தன் அணி சார்பாக மற்றுமொரு கோல் அடித்து அசத்தினார். கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு சென்ற பெல்ஜிய அணியை பழி வாங்கும் முனைப்பில் செயல்பட்ட பிரேசில் அணியின் ஆட்டம் முதல் பாதியில் பொய்த்து போனது. 

தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் பிரேசில் அணிக்கு மிகப்பெரும் சவாலாக இருந்த பெல்ஜிய அணி வீரர்கள், பிரேசில் அணியினரின் கோல் அடிக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். இந்நிலையில் ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் ரெனாடோ அகஷ்டோ கோல் அடிக்க அந்நாட்டு ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து சுதாரித்து கொண்ட பெல்ஜிய அணி அற்புதமான முறையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மாரும் ஆட்டத்தில் ஜொலிக்காதது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த பெல்ஜிய அணி இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. 

ஆசிரியரின் தேர்வுகள்...