கால்பந்து

பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் கோட்டை விட்டகொலம்பியா கால்பந்து அணி வீரர்களுக்கு கொலை மிரட்டல் + "||" + The penalty kicked off in the 'shoot-out' Colombian football team murder threats

பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் கோட்டை விட்டகொலம்பியா கால்பந்து அணி வீரர்களுக்கு கொலை மிரட்டல்

பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் கோட்டை விட்டகொலம்பியா கால்பந்து அணி வீரர்களுக்கு கொலை மிரட்டல்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்றில் இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் வழக்கமான மற்றும் கூடுதல் நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
போகோடா, 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்றில் இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் வழக்கமான மற்றும் கூடுதல் நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனை அடுத்து நடந்த பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. பெனால்டி ‘ஷூட்-அவுட்’ வாய்ப்பில் கொலம்பியா அணி வீரர்கள் மாடிஸ் உரிப் அடித்த பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியது. கார்லோஸ் பக்கா அடித்த பந்தை, இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் பிக்போர்ட் தடுத்து நிறுத்தினார். பெனால்டி ‘ஷூட்-அவுட்’ வாய்ப்பை கோலாக்க தவறிய கொலம்பியா வீரர்கள் மாடிஸ் உரிப், கார்லோஸ் பக்கா ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அந்த நாட்டு ரசிகர்கள் கடுமையாக வசைபாடி இருக்கிறார்கள். வீரர்களை மட்டமாக விமர்சனம் செய்து இருப்பதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். ஏற்கனவே ஜப்பானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ் சாஞ்சஸ் சிவப்பு அட்டை பெற்று, அதன் மூலம் தோல்விக்கு வித்திட்டதால் அவருக்கு ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததும், அது குறித்து கொலம்பியா போலீசார் விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.