கால்பந்து

உலக கோப்பை கால்பந்தில்ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம் + "||" + World Cup football European teams dominate

உலக கோப்பை கால்பந்தில்ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம்

உலக கோப்பை கால்பந்தில்ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம்
உலக கோப்பை கால்பந்து போட்டியை பொறுத்தவரை ஐரோப்பா, தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளே கோப்பையை மாறி மாறி வென்று வருகின்றன.
சோச்சி, 

உலக கோப்பை கால்பந்து போட்டியை பொறுத்தவரை ஐரோப்பா, தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளே கோப்பையை மாறி மாறி வென்று வருகின்றன. இதுவரை 11 முறை ஐரோப்பிய நாடுகளும், 9 முறை தென்அமெரிக்க நாடுகளும் மகுடம் சூடியுள்ளன. இந்த முறை அரைஇறுதியை எட்டியுள்ள 4 அணிகளும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த அணிகளாகும். உலக கோப்பை வரலாற்றில் அரைஇறுதிக்கு 4 ஐரோப்பிய அணிகள் ஒருசேர வருவது இது 5-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1934, 1966, 1982, 2006-ம் ஆண்டுகளில் இவ்வாறு நடந்துள்ளது.

இந்த உலக கோப்பையில் தென்அமெரிக்க கண்டத்தில் இருந்து பிரேசில், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பெரு ஆகிய 5 அணிகள் தகுதி பெற்றிருந்தது. இந்த அணிகளின் சவால் கால்இறுதியோடு முடிந்து போனது. ஐரோப்பாவில் நடத்தப்படும் உலக கோப்பை போட்டிகளில் தென்அமெரிக்க அணி 1958-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையை வென்றதில்லை. பிரேசிலின் வெளியேற்றத்தின் மூலம் அந்த சோகம் இந்த முறையும் நீடிக்கிறது.