கால்பந்து

யுவென்டஸ் கிளப்புக்கு ரொனால்டோ ஒப்பந்தம் + "||" + Ronaldo's contract for the Yuventus club

யுவென்டஸ் கிளப்புக்கு ரொனால்டோ ஒப்பந்தம்

யுவென்டஸ் கிளப்புக்கு ரொனால்டோ ஒப்பந்தம்
யுவென்டஸ் கிளப்புக்கு ரொனால்டோ ஒப்பந்தமாகி உள்ளார்.
மாட்ரிட்,

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும், உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 5 முறை பெற்றவருமான கிறிஸ்டியானா ரொனால்டோ கடந்த 9 ஆண்டுகளாக ஸ்பெயினின் ரியல்மாட்ரிட் கிளப்புக்காக விளையாடி வந்தார். அவரது காலத்தில் ரியல்மாட்ரிட் அணி லாலிகா பட்டத்தை 2 முறையும், சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 4 முறையும் வசப்படுத்தியது. இந்த கிளப்புக்காக அவர் 451 கோல்கள் அடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் 33 வயதான ரொனால்டோ, ரியல்மாட்ரிட் அணியை விட்டு விலகி இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்கு மாறியுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டு, அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. யுவென்டஸ் அணிக்காக 4 ஆண்டு காலத்திற்கு ரூ.806 கோடிக்கு அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.