ரஷ்யாவில் ஒரு குடைதான் உள்ளதா? - புடினை கேலி செய்த ரசிகர்கள்


ரஷ்யாவில் ஒரு குடைதான் உள்ளதா? - புடினை கேலி செய்த ரசிகர்கள்
x
தினத்தந்தி 16 July 2018 6:22 AM GMT (Updated: 16 July 2018 6:22 AM GMT)

ரஷ்யாவில் ஒரு குடைதான் உள்ளதா? என ரஷ்ய அதிபர் புடினை ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். #VladimirPutin

மாஸ்கோ,

21வது கால்பந்து உலகக்கோப்பை திருவிழா ரஷ்யாவில் தொடங்கி நடைபெற்றது. இதில் கடந்த கால சாம்பியன்களான ஜொ்மனி, பிரேசில் அணிகள் வெளியேற்றப்பட்டன. மேலும் கால்பந்தின் ஜாம்பவான்களான அா்ஜென்டீனா, ஸ்பெயின் அணிகளும் வெளியேற்றப்பட்டன.

இந்நிலையில் பிரான்சும், குரேஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தில் சாம்பியன் பட்டம் வென்றது.

கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ் அணிக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் நேற்று உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விருது வழங்கும் நிகழ்சியில் ரஷ்ய அதிபர் புதினுக்கு மட்டும் குடை பிடிக்கப்பட்டு, மற்ற தலைவர்கள் மழையில் நனைந்து கொண்டிருந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் அதிபர் புதினுடன் பிரான்ஸ் அதிபர் எமானுவல் மெக்ரான், குரோஷியா அதிபர் கோலிண்டா கிராபர்-கிடரோவிக், பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. அப்போது அருகிலிருந்த பாதுகாவலர்கள் மூலம் ரஷ்ய அதிபர் புதினுக்கு மட்டும் குடை பிடிக்கப்பட்டது. மற்ற தலைவர்கள் மழையில் நனைந்தபடி இருந்தனர். இதைப்பார்த்த கால்பந்து ரசிகர்கள், ரஷ்யாவில் ஒரே ஒரு குடைதான் உள்ளதா என டுவிட்டரில் கேலி செய்தனர். மேலும் புதின் சக்தி மிக்கவர் என்றும், ஏனென்றால் விருது வழங்கும் விழாவில் அனைவரின் மீதும் மழைபொழிய வைத்துள்ளார் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு ரஷ்ய அதிபர் புதினை கிண்டல் செய்து வருகின்றனர்.


Next Story