சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து: அர்செனல், செல்ஸி, லிவர்பூல், பார்சிலோனா அணிகள் வெற்றி


சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து: அர்செனல், செல்ஸி, லிவர்பூல், பார்சிலோனா அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 30 July 2018 3:03 AM GMT (Updated: 30 July 2018 3:03 AM GMT)

சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியின் பல்வேறு ஆட்டங்களில் அர்செனல், செல்ஸி, லிவர்பூல், பார்சிலோனா அணிகள் வெற்றி பெற்றன. #InternationalChampionsCup

அமெரிக்கா,

அமெரிக்காவில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அர்செனல், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின. இதில் அர்செனல் அணிஉஇன் சார்பில் மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் சார்பில் 60-வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் ஒரு கோல் அடித்தார். அதன்பின் அர்செனல் அணியின் ராப் ஹோல்டிங் 87-வது நிமிடத்திலும், எட்டி 90+4 நிமிடத்தில் கோல் அடிக்க அர்செனல் 5-1 என அபார வெற்றி பெற்றது.

* பிரான்ஸின் நைஸ் நகரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணி 5-4 என பெனால்டி ஷூட் அவுட் முறையில் இன்டர் மிலான் அணியை வீழ்த்தியது.   முன்னதாக ஆட்டம் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்திருந்தது. செல்ஸி அணியின் கோல்கீப்பர் வில்லி கேபலரோ மிலன் அணியின் கிர்னியார்   பெனால்டி வாய்ப்பில் அடித்த பந்து அற்புதமாக தடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

* அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் லிவர்வூர்-மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இடையிலான ஆட்டத்தில் லிவர்பூல் அணி 4-1 என்ற கோல் கணக்கில்   அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சாடியோ மேன், டேனியல் ஸ்டரிட்ஜ், ஷை ஓஜோ, ஹெர்டன் ஷக்ரி ஆகியோர் கோலடித்தனர். மான்செஸ்டர்     யுனைடெட் அணி சார்பில் மிட்பீல்டர் ஆன்ட்ரெஸ் பெரைரா ஓரு கோல் அடித்தார்.

* அமெரிக்காவின் பஸடேனா நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டாட்டன்ஹாம் அணியை 5-3 என பெனால்டி ஷூட் வாய்ப்பில் பார்சிலோனா அணி வீழ்த்தியது. பார்சிலோனா அணியின் சார்பில் முனிர் இ ஹட்டாடி, ஆர்தர் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இதேபோல் டாட்டன்ஹாம் அணியின் சார்பில் சான், ஜார்ஜ் கெவின் தலா 1 கோல் அடித்தனர். இதன்மூலம் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்ததால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 5-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அபார வெற்றி பெற்றது. 

Next Story