கால்பந்து

அர்ஜென்டீனா கால்பந்து: இடைக்கால பயிற்சியாளர்கள் நியமனம் + "||" + Argentina Football: Interim Trainers Appointment

அர்ஜென்டீனா கால்பந்து: இடைக்கால பயிற்சியாளர்கள் நியமனம்

அர்ஜென்டீனா கால்பந்து: இடைக்கால பயிற்சியாளர்கள் நியமனம்
அர்ஜென்டீனா கால்பந்து அணிக்கு இடைக்கால பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #ArgentinaFootball
பியூனோஸ் ஏரிஸ்,

உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடைபெற்றது. இந்த கால்பந்து தொடரில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டீனா காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது.


இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜார்ஜ் சம்போலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அர்ஜென்டீனா அணியின் இடைக்கால பயிற்சியாளர்களாக பப்லோ எய்மர், லியோனல் ஸ்காலோனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அர்ஜென்டீனா கால்பந்து சங்கத்தின் தலைவர் கிளாடியோ டபியா நிறைவேற்றுக் குழுவை சந்தித்தபின் இந்த முடிவை அறிவித்தார்.

உலகக்கோப்பைக்குப் பிறகு அர்ஜென்டீனா அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் செப்டம்பர் 7-ந்தேதி கவுதமாலாவையும், செப்டம்பர் 11-ந்தேதி கொலம்பியாவையும் எதிர்கொள்கிறது. மேலும் அர்ஜென்டீனா அணி அக்டோபரில் நடக்க உள்ள போட்டியில் பரம எதிரியான பிரேசில் அணியை எதிர்கொள்ள உள்ளது.